இத்தலம்
திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம்
என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து
பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால்
நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி
சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி
மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி
கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில்
கோயிலுக்குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி
அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்;
அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப்
பெருமாள் என்று பெயர்.அர்த்தநாரீசுவரர்
பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது
விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம்.
தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16
தீர்த்தங்கள் உள்ளன.
கல்வெட்டு:
பரகேசரி வர்மனான
முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற்
பரகேசரிவர்மன், சுந்தரபாண்டிய தேவன்,
சொக்கப்பநாயக்கன், சொக்கலிங்கநாயக்கன்,
மைசூர் கிருஷ்ணராஜ உடையார் முதலிய அரசர்களின்
கல்வெட்டுக்கள் இங்குக் காணப்படுகின்றன.
அவற்றால் அறியப்படுவன பெரும்பாலானவை
அந்தணர்களுக்கு அன்னமும், யாத்தீரிகர்களுக்கு
உணவும், விளக்கிற்கு நெய்யும் அளிக்கப்பெற்ற
நிபந்தங்களேயாகும். 192 முதல் 194 வரையிலுள்ள
கல்வெட்டுக்கள் சுப்பிரமணியப் பிள்ளையார்
கோயிலைப்பற்றி அறிவிக்கின்றன. கி.பி. 1660
முதல் 1682 வரை அரசாண்ட விஸ்வநாத சொக்கலிங்கர்
காசிவிசுவேசர் கோயிலையும் கோபுரத்தையுங்
கட்டினார்.
50. திருப்பூவணம்
பாண்டிநாட்டுத்
தலம். மதுரைக்குக் கிழக்கே வைகையின்
தென்கரையில் 18.கி.மீ. தூரத்தில் இத்தலம்
இருக்கிறது. மதுரையிலிருந்து பேருந்துகள் உள்ளன.
இது பிரமன் பூசித்த
தலம். ‘நான்மறையோன் கழலே சென்றுபேணி
ஏத்த நின்ற
தேவர்பிரான் இடமாம்’ என்பது சம்பந்தர்
தேவாரம். பொன்னனையாள் என்னும் தாசிக்காகச்
சொக்கலிங்கப் பெருமான் சித்தர்வடிவாக
எழுந்தருளி ரசவாதம் செய்து சோமாஸ் கந்தர்
திருவுருவத்தை அமைக்க அருள் செய்தனர் என்பது
திருவிளையாடற்புராணத்துட் காணப்படும் வரலாறு.
இத்தலம்
தமிழ்நாட்டு மூவேந்தர்களும் ஒருங்கு கூடி வழி
|