பட்ட தலமாக இருந்தது
என்பதனை ‘முன்சேர் தென்னர் சேரர் சோழர்கள்
தாம் வணங்கும் திருப்பூவணம்’ என்னும் சம்பந்த
சுவாமிகள் வாக்காலும், ‘உதியருடன் வன்றொண்டர்
தாமிருந்த இடங்கெழுமி வளவனார் மீனவனார்
வளம்பெருக மற்றவரோடும் அளவளாவிய விருப்பால்
அமர்ந்து கலந்து இனிதிருந்தார்’ என்னும்
சேக்கிழார் திருவாக்காலும் அறியலாம்.
இறைவன் பூவணநாதர்.
இறைவி மின்னம்மை. மின்னனையாளம்மை என்று
வழங்குவதுமுண்டு. விருட்சம் பலா. தீர்த்தம் வைகை.
கல்வெட்டு:
கோநேரின்மைகொண்டான்
தனது எட்டாம் ஆட்சியாண்டில் புஷ்பவனேசுவரர்
கோயிலுக்கு நிலம் வழங்கினான். குலசேகரதேவன்
தனது 25 ஆம் ஆட்சியாண்டில் தினந்தோறும் வேத
பாராயணஞ் செய்ய 1008 பிராமணர்களுக்கு உணவிற்காக
நிலம் அளித்தான். ஒரு செப்பேடு ராஜகெம்பீர
சதுர்வேதி மங்கல சபைக்கு 25 காசுகள் வழங்கியதை
அறிவிக்கிறது.
51. திருமாற்பேறு
தொண்டை
நாட்டுத்தலம். காஞ்சிபுரம் - அரக்கோணம்
இருப்புப்பாதையில் இரயில் நிலையம்.
காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. இதுவே
எளிதானது.
இத்தலம்
ஹரிசக்ரபுரம் எனவும் வழங்கும். திருமால் ததீசி
முனிவருடன் போர்செய்ய அவர் சக்கரம் வாய்மடிந்து
போயிற்று. சலந்தரனைக் கொன்ற சக்கரம்
சங்கரனிடத்திருப்பதையறிந்த திருமால்
இத்தலத்திற்குவந்து இறைவனை ஆயிரந்தாமரைகொண்டு
அர்ச்சிக்க, இறைவன் ஒரு நாள் ஒரு மலரை
மறைத்துவிட்டார். திருமால் அதற்குப் பதிலாகத்
தம் கண்ணையிடந்து அர்ச்சிக்க, சுதரிசனம்
என்னும் சக்கரத்தை ஈந்தார். கண் இடந்து
அர்ச்சித்தமைக்காகப் பதுமாக்ஷன் என்னும்
பெயரையும் கொடுத்தார். சோமனும் பூசித்துப்
பேறுபெற்ற தலம். இச்செய்தி ‘மன்னி மாலொடு
சோமன் பணிசெயும் மன்னுமாற் பேற்றடிகளை’
என்னும் தேவாரத்தானும், ‘பெருமாற்றின்
படைவேண்டி நற்பூம்புனல் வருமாற்றின் மலர் கொண்டு
வழிபடும் கருமாற்கின்னருள் செய்தவன்’ என்னும்
திருக்குறுந்தொகை யானும் அறியப்படும். இறைவன்
பெயர் மால்வணங்கீசர், மணிகண்டேசர்,
|