பக்கம் எண் :

198தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


தயாரிக்கப்பட்டது. இது இன்னார் சிலை என்று அறியக்கூட வில்லை.1 இராஜகேசரிவர்மன் குலோத்துங்கன் I 5ஆம் யாண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை செய்து வைக்கப்பெற்றது. 2ஏனைய கல்வெட்டுக்கள் கோயிலுக்கு விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும்விட்ட செய்தியை அறிவிப்பன, குலோத்துங்கசோழன் III ஆட்சி 12ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைக் கைக்கொண்டசேங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். 3கங்கன் என்பவனால் அர்ச்சனாபோகமாக நிலம் அளிக்கப்பெற்றுள்ளது.4

72. திருநல்லம்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் வடமட்டம் பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் கோநேரிஇராஜபுரம் என வழங்கும். இத்தலத்தில் நடராசருடைய விக்ரகம் மிகப் பெரியதாகவும், அழகாகவும் இருக்கிறது.

சுவாமி உமாமகேசுவரர்; அம்மை மங்களநாயகி; தீர்த்தம் சக்திதீர்த்தம்.

கல்வெட்டு:

இக்கோயிலை மதுராந்தகதேவனான உத்தமசோழன் தாயும் கண்டராதித்தன் மனைவியுமான செம்பியன்மாதேவியார் கருங்கற் பணியாகக் கட்டினாள்5. இறைவன் திருநல்லமுடையார், திருநல்ல முடையமகாதேவர் என6 வழங்கப்பெறுவர்7, இராஜகேசரிவர்மனான இராஜராஜன் காலத்தில் கோயிலில் திருப்பதிகம் ஓத இருவரால் பூங்குடி கிராமத்தில் நிலம் விடப்பெற்றது8. உடையபிராட்டியார் உத்தரவின்படி சாத்தன் குணபட்டனான அரசாணசேகரனால் கோயில் கட்டப்பெற்றது9. இராஜராஜன் காலத்தில் தெரிஞ்ச கைக்கோளர்களில் ஒருவனான நக்கன் நள்ளாற்றடிகளால் கடவுளின் வெள்ளி விக்ரகம் ஒன்றும், சண்டேசுவரர் செப்புவிக்ரகமும் செய்விக்கப்பெற்றன. இன்னாரது என்று அறியப்பெறாத கல்வெட்டு ஒன்று செம்பியன்மாதேவி கண்டராதித்தன் பெயரால் இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்தான் என்கின்றது10. இங்கே கைலாசமுடையமகாதேவர்11

____________

1 235 of 1901, 2 247 of 1901, 3 239 of 1901, 4 108 of 1934, 5 450 of 1908, 6 628 of 1909, 7 450, 624 of 1908, 8 624 of 1909, 9 626 of 1909, 10 635 of 1909, 11 653 of 1909.