கல்வெட்டு:
திரிபுவனச்சக்ரவர்த்தி
வீரதேவனது 36 ஆம் ஆண்டில் இராஜராஜவளநாட்டுத்
திருவாலிநாட்டுத் திருவீங்கோய்மலை என
வழங்கப்பட்டது. இறைவன்பெயர் திருவீங்கோய்
ஊருடையார் என்று கல்வெட்டு கூறும்.
இக்கோயிலில் ஆளுடைய பிள்ளையார்க்கும்,
திருநாவுக்கரசுதேவர்க்கும், ஆலாலசுந்தரப்
பெருமானுக்கும், நக்கீரதேவர்க்கும்,
திருப்படிமாற்றுக்கும், வியஞ்சநத்துக்கும்
வடகரை இராஜராஜ வளநாட்டு மலை ஸ்ரீஜயங்கொண்டசோழ
சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குடி மகாசபையார்
நிலம் விற்றுக்கொடுத்தனர்.
71.
திருஅச்சிறுபாக்கம்
தொண்டை
நாட்டுத்தலம். மயிலாடுதுறை - சென்னை
பாதையில் இரயில் நிலையம். திண்டிவனம்
செங்கல்பட்டுப் பேருந்து வழியில் உள்ளது.
இறைவரின் தேர்
அச்சு இற்ற காரணத்தால் இப்பெயர் எய்தியது.
சிவபெருமான் திரிபுரதகனஞ்செய்யும் பொருட்டுத்
தேவர்கள் அமைத்த தேரில் எழுந்தருளும்போது,
தேவர்கள் விநாயகரை வணங்காமையின் அச்சு
முரிந்தது என்பதும், பாண்டியனொருவன் கங்கை
மணலை வண்டியில் கொண்டு வரும்போது,
இத்தலத்திற்கு வந்ததும் வண்டி மேற்கொண்டும்
செல்லாமையின் ஊக்கிச் செலுத்த அச்சு முரிந்தது.
அவன் அசரீரியினால் செய்தியறிந்து ஆலயத்
திருப்பணி செய்தான் என்பதும் வரலாறு.
கண்ணுவர் கௌதமர் பூசித்துப் பேறு பெற்றனர்.
இறைவன்
பாக்கபுரேசுரர். இறைவி சுந்தரநாயகி,
தீர்த்தம் வேததீர்த்தம். விருட்சம்
கொன்றை.
கல்வெட்டு:
இத்தலம்
இராஜேந்திர சோழவளநாட்டைச் சேர்ந்ததாகக்
குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகிறது.
இத்தலத்திறைவன் அக்ஷேசுவரர்.
கல்வெட்டுக்களில் அச்சுக்கொண்டருளிய தேவர்1 என
வழங்கப்படுகிறார். திரிபுவனசக்கரவர்த்தி
கோனேரின்மை கண்டான் காலத்தில் ஆட்கொண்ட
நாயகன் சேதிராயனால் ஒருசிலை
______________
1 241 of 1901.
|