பக்கம் எண் :

200தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


சிவபெருமான் ஆப்பினிடத்துத் தோன்றினமையால் இப்பெயர் பெற்றது. நடராசர், சிவகாமி இருவர்களின் உருவம் சிலையிலும் செம்பிலும் உள்ளன.

இறைவன்பெயர் ஆப்பானூர்க்காரணர், ஆப்பனூரீசுரர், திருவாப்புடையார். இறைவியின் பெயர் அம்பிகையம்மை, குரவங்கமழ் குழலம்மை. தீர்த்தம் இடபதீர்த்தம்.

75. திருஎருக்கத்தம்புலியூர்

நடுநாட்டுத்தலம் விருத்தாசலம் - ஜயங்கொண்டம் பேருந்து வழியில் உள்ளது. இராஜேந்திரபட்டினம் எனவழங்குகிறது. எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின் இப்பெயர்பெற்றது. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம்.

இறைவன் பெயர் நீலகண்டர், இறைவியின் பெயர் நீலமலர்க் கண்ணியார். விருட்சம் எருக்கு.

76. திருஅன்னியூர்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். பொன்னூர் எனவழங்கும். மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துகளில் செல்லலாம். வருணன் பூசித்துப் பேறுபெற்றதலம்.

சுவாமி பெயர் ஆபத்சகாயேசுரர். அம்மையின் பெயர் பெரிய நாயகியம்மை. தீர்த்தம் வருணதீர்த்தம்.

77. திருக்கண்ணார்கோயில்

சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலம். மயிலாடுதுறை - வைத்தீசுவரன் கோயில் பேருந்துவழியில் உள்ளது. குறுமாணக்குடி என வழங்கும். கௌதம முனிவரால் சாபம்பெற்ற இந்திரன் பூசித்துச் சரீரத்திலுள்ள குறிகள் அனைத்தையும் கண்களாக மாற்றிக் கொண்டமையால் இப்பெயர் எய்தியது. வாமனமூர்த்தியும் பூசித்துப்பேறு பெற்றமையின் குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று.