பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்201


இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் முருகுவளர்கோதை. தீர்த்தம் இந்திரதீர்த்தம்.

இடம் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தென்கிழக்கே 2.5 கி.மீ தூரத்தில் உள்ளது.

78. திருப்பாதாளீச்சரம்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. பாமணி, பாம்பணி என வழங்கப் பெறுகிறது. சர்ப்பபுரம் எனவும் பெயர் உண்டு. தனஞ்சயன் என்னும் பாம்பு பூசித்துப் பேறுபெற்ற தலம். அம்முனிவருடைய திருவுரும் கோயிலில் உள்ளது.

இறைவன் பெயர் நாகநாதர், சர்ப்பபுரீசுவரர்; இறைவியின் பெயர் அமிர்தநாயகி; தீர்த்தம் நாகதீர்த்தம்.

கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றியதாக ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்திறைவன் திருப்பாதாளீச்சரம் உடையார். செல்வத்திருவாரூர் வாகீசப் பெருமான் வடகீழ்மடத்து முதலியார் பிள்ளையின் நிலங்கள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. இதில் ஆலாலசுந்தரர் திருமடமும் குறிக்கப்படுகின்றது. இத்தலம் சுற்றவேலி வளநாட்டுப் பாம் பணிகூற்றத்துப் பாமணி என இராஜராஜன் காலத்து அழைக்கப்படுகின்றது. இவையன்றி ஸ்ரீபூதிவிண்ணகர ஆழ்வார்க்கு விளக்கிற்காகவும், வழிபடவருவார்க்கு உணவிற்காகவும் பொன்னும் ஆடும் வழங்கப்பெற்றன.1

79. திருக்கடைமுடி

இத்தலம் கீழூர் எனப் பெயர்பெறும். சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலமாய்க் காவிரியின் கடைமுடியாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. பிரமன் பூசித்துப் பேறுபெற்றதலம்.

____________

1 169 to 174 of 1926.