பக்கம் எண் :

202தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


சுவாமிபெயர் கடைமுடிநாதர். அம்மையின்பெயர் அபிராமியம்மை. தீர்த்தம் கருணாதீர்த்தம்.

கல்வெட்டு:

கடைமுடி என்பது கீழூராயின் கல்வெட்டொன்றுமில்லை. சேதுசமஸ்தான வித்துவான் மு. இராகவையங்காரவர்கள் தமது ஆராய்ச்சித் தொகுதியில் சிறந்ததோர் ஆராய்ச்சி வெளியிட்டுள்ளார்கள். அதன் சுருக்கமாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவிலடி எனவழங்கும் பேரூருக்குப் பக்கத்தில் கிழக்கே 2.5 கி.மீ தூரத்தில் திருச்சின்னம்பூண்டி என்ற கிராமம் உள்ளது. அங்கே உள்ள இறைவர் சடையை உடையர், சடேசுவரர் என்று வழங்கப்படுகிறார். அங்கேயுள்ள சாசனங்கள் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன், அவன் மகன் கோவிஜய நிருபதுங்கவர்மன், முதற்பராந்தகன் இவர்கள் காலத்தன. அவற்றுள் முதற்பராந்தகன் காலத்துக் கல்வெட்டுக்களில் ஒன்றே ஒன்று திருச்சடைமுடி மகாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனைய இறைவன் பெயரை, திருக்கடைமுடிமகாதேவர் என்றே குறிப்பிடுகின்றன. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் அதாவது ஏழாம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்தர் காலத்திற்கு அணிமையில் திருக்கடைமுடி இப்பொழுது வழங்கும் சென்னப்பூண்டி என்றே விளங்கினமை யறியலாம். திருச்சடைமுடி என்பது திருப்பேராகிய கோவிலடிக்கு வழங்கிய பெயராதலைப் பிற கல்வெட்டுக்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஆதலால் கீழூர் கடைமுடியன்று என்பர்.

சென்னம்பூண்டி கடைமுடியைப் பற்றியனவாக 22 கல்வெட்டுக்கள் உள்ளன. தென்கரை இடையாற்றுநாட்டு திருக்கடைமுடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது1. நிருபதுங்கவர்மன் காலத்து அரசி ஒருத்தி விளக்கிற்காகப் பொன் அளித்தாள். முதற்பராந்தகன் பணிகள்யாவும் விளக்கிற்காக ஆடுகள் அளித்தமையே. வீரநாராயண மூவேந்த வேளான் முதலான அரசியல் தலைவர்களும் நிபந்தங்கள் அளித்துள்ளார்கள்.

80. திருஇராமனதீச்சரம்

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். இடம் திருப்புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, கண்ணபுரம்

________

1 284 of 1901.