பக்கம் எண் :

 ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை21



குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்
26 ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

ஆசியுரை
தேவாரம்

திருச்சிற்றம்பலம்

"நறவம் நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தாற்
சுறவஞ் செறிவண் கொடியோ னுடலம் பொடியா விழிசெய்தான்
புறவம் உறைவண் பதியாம் மதியார் புரமூன் றெரிசெய்த
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே."

- திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்

சொரூபநிலை:

இறைவன் ஒருவனே. அவன் தன்மையால் இருதிறப்படுவான். இதனைத் திருஞானசம்பந்தர், ‘தோடுடைய செவியன்’ என்றார். தோட்டையுடைய செவி அம்மைக்குரியது. அம்மையை இடப்பாகத்தே உடையவராதலின் தோடுடைய செவியன் என்று இறைவனை இருதன்மையோடு கூடிய ஓருருவாகவே கூறினார். இறைவன் தோடுடைய செவியனாய்க் காட்சி கொடுத்தபின் பொங்கொளி மால் விடைமீதிவர்ந்து பொற்றோணி புகுந்தருளினார்.

அத் தோணியப்பரை ‘நறவம் நிறைவண்டு’ என்று தொடங்கும் இரண்டாவதாகப் பாடியருளிய பதிகத்துள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘இமையோர் ஏத்த உமையோடிருந்தானே’ என்றமை