அரசனை அணுகி ‘ஞானசம்பந்தர்
திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி
வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம்’
என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம
மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை
உணர்ந்து ‘அவரை அழைப்பீராக’ என்று கூறினான்.
சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால்
தீர்க்கப்பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது
எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை
பிறழேன் என மறுத்தான். குலச்சிறையாரும்
அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத்
திருமடத்திற்குத் தீயிட்டசெயலுக்கு மிக
வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால்
வாடுவதை விண்ணப்பித்துத் ‘தாங்கள் எழுந்தருளி
நோயைக் குணப்படுத்தினால் உய்வோம்’ எனக் கூறி
நின்றனர். ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்யும்
வாதில் வென்று ‘தென்னர்கோனுக்குத் திருநீறு
அணிவிப்போம்’ எனக் கூறிப் புறப்பட்டுத்
திருக்கோயிலை அடைந்து ‘காட்டு மாவது உரித்து’
என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன்
திருவுளக் குறிப்பை அறிந்தார். மேலும் சமணர்
மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க ‘வேத
வேள்வியை’ என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம்
விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி
மன்னனின் மாளிகையை அடைந்தார்.
வெப்பு நோய்
தவிர்த்தல்:
ஞானசம்பந்தர்
பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில்
இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார்.
மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில்
நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு
உரையாடும் முறையில் ‘நுமது ஊர் எது’ எனக் கேட்கப்
‘பிரமனூர்’ என்ற திருப்பதிகத்தால்
விடையளித்தார்.
சமணர்கள்
அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக்
கொண்டு சம்பந்தரை நோக்கி ‘உங்கள் சமயக்
கொள்கைகளைக் கூறுங்கள்’ எனக்கூறினர். அரசியார்
கொடிய சமணர்கள் நடுவில் இப்பாலகரை நாம்
அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி
‘மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள்.
நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம்’ என்றார்.
ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து ‘அஞ்சற்க;
என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன்
துணைநிற்க வாதில் வெல்வோம்’ என்றார்.
சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய
நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி
கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும்
கூடியது. ஞானசம்பந்தர் ‘மந்திரமாவது நீறு’ என்ற
திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால்
வலப்பாகத்தில் திரு
|