பக்கம் எண் :

 3. திருவலிதாயம்277


3. திருவலிதாயமபதிக வரலாறு:

திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார் கூட்டத்தோடும் ‘மலையுங் கானுங் கடந்து போந்து, பாலியாற்று வடகரையை அடைந்து, திருவேற்காட்டை வணங்கி அதனை அடுத்துள்ள வலிதாயத்தை வணங்கும்போது ‘பத்தரோடு‘ என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்கள்.

பண்: நட்டபாடை

பதிக எண்: 3

திருச்சிற்றம்பலம்

23. பத்தரோடுபல ரும்பொலியம்மலர்

அங்கைப்புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு

தேத்தவுயர்சென்னி

மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை

கின்றவலிதாயம்

சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை

யாமற்றிடர்நோயே. 1

__________________________________________________

1. பொ-ரை: வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலக மக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

கு-ரை: இது திருவலிதாயத்தைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை என்கின்றது.

மந்திர புஷ்பம் இடுவதற்காக வலக்கையில் பூவை வைத்து