| 
 24. படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக் கடையிலங்குமனை
    யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில் மடையிலங்குபொழி
    லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம் அடையநின்றவடி
    யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.
    2 __________________________________________________ அர்க்கிய ஜலத்தைச்
சொரிந்து கையைமூடி அபிமந்திரித்துப் பலர் கூடி வேத
மந்திரங்களைச் சொல்லி, இறைவற்குச் சாத்துதல்
மரபாதலின் அதனைப் ‘பத்தரோடு......ஒத்தசொல்லி‘
என்பதால் குறிப்பிடுகிறார். பத்தர் - பூசிக்கும்
சிவனடியார்கள். பலர் - உடனிருக்கும் சிவனடியார்கள்.
பொலியம்மலர் - விளங்குகின்ற அழகிய மலர். புனல்
தூவி - அர்க்கிய ஜலத்தை மந்திரத்தோடு சொரிந்து.
ஒத்த சொல்லி - ஒரே ஸ்வரத்தில் வேதமந்திரங்களைச்
சொல்லி என்ற செய்தென் எச்சத்தைச் சொல்ல என்று
செயவெனெச்சமாக்குக. அங்ஙனம் அவர்கள் திருவணுக்கன்
திருவாயிலில் நின்று வேத மந்திரங்களைச்
சொல்கின்ற காலத்து வழிபடும் அடியார்கள் தொழுவார்கள்
ஆதலின், அதனை உலகத்தவர் தாம் தொழுதேத்த என்பதால்
விளக்குகின்றார். பிரியாதுறைகின்ற என்றது இறைவன்
எங்கணும் பிரியாது உறைபவனாயினும் இங்கே அனைவர்க்கும்
விளங்கித் தோன்றும் எளிமைபற்றி. அடியாரவர்மேல்
என்றதில் ‘அவர்‘ வேண்டாத சுட்டு. இதனைச் சேர்த்து
அடியார்கள் பெருமை விளக்கியவாறு. இடர் - ஆதிபௌதிகம்
முதலிய வினைகளால் வரும் துன்பம். நோய் - பிறவிநோய்.
‘பத்தரோடு பலரும் தூவிச்சொல்ல உலகத்தவர் தொழுது
ஏத்தப்பெருமான் பிரியாதுறைகின்ற வலிதாயத்தைச்
சித்தம் வைத்த அடியார்மேல் இடர் நோய் அடையா‘
எனக் கூட்டுக. 2. பொ-ரை: படைக் கலங்களை
ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும்,
பொய்யாகப் பலியேற்பது போலப் பிரம கபாலத்தைக்
கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும்
கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும்,
நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில்
தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும்
அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடைய மாட்டா. |