பக்கம் எண் :

 9. திருவேணுபுரம்335


88. படைப்புந்நிலை யிறுதிப்பயன்

பருமையோடு நேர்மை

கிடைப்பல்கண முடையான்கிறி

பூதப்படை யானூர்

புடைப்பாளையின் கமுகின்னொடு

புன்னைமலர் நாற்றம்

விடைத்தேவரு தென்றன்மிகு

வேணுபுர மதுவே. 2

__________________________________________________

பெரிய மாடங்கள் விண்ணைத் தாங்குவன போல உயர்ந்து விளங்கும் வேணுபுரமாகும்.

கு-ரை: இது உமாதேவியைப் பிரியாதிருக்க ஒருபாகமே பெண்ணான பெருமான் ஊர் வேணுபுரம் என்கின்றது. வண்டார்குழல் அரிவை - வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய பெண்ணாகிய உமை. பிரியாவகை - பிரியாதிருக்க. பாகம் - ஒரு பாகத்திலேயே. மிகப் பெண் ஆனான் - முழுதும் பெண்வடிவானவன். தவளம் - வெண்மை. மாடம் விண்தாங்குவ போலும் என்றது உயர்வு நவிற்சியணி.

2. பொ-ரை : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரிவோனும், அவற்றின் முடிந்த பயனாய வீட்டின்ப வடிவாய் விளங்குவோனும், பருமை நுண்மை இவற்றிற்கோர் எல்லையாக இருப்பவனும், வேதங்களை ஓதும் கணங்களை உடையோனும், வஞ்சகமான பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது ஊர், பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கும் கமுகம் பாளையின் மணத்தோடு புன்னை மலர்களின் மணத்தைத் தாங்கி மெல்லெனப் பெருமிதத்தோடு வரும் தென்றல் காற்று மிகுந்து வீசும் வேணுபுரம் ஆகும்.

கு-ரை: படைப்பு - சிருஷ்டி. நிலை - திதி. இறுதி - சம்ஹாரம். பயன் - முத்தொழிலின் பயனாகிய வீட்டின்பத்தின் வடிவாய் இருப்பவன். பயன் - பயன் வடிவாகிய இறைவனை உணர்த்திற்று. பருமை - பருப்பொருள். நேர்மை - நுண்பொருள் என்றது அணுவுக்கு அணுவாயும் பெரியவற்றிற்கெல்லாம் பெரிதாயும் நிற்கும் இறைவனின் நிலை உணர்த்தியவாறு. கிடை பல் கணம் உடையான் - வேதத்தை ஓதும் கூட்டமாகிய பல சிவகணங்களையுடையவன். கிடை - வேதம் ஓதும் கூட்டம். ‘ஓதுகிடையின் உடன் போவார்‘ (பெரிய,