89. கடந்தாங்கிய
கரியையவர்
வெருவவுரி
போர்த்துப்
படந்தாங்கிய
வரவக்குழைப்
பரமேட்டிதன்
பழவூர்
நடந்தாங்கிய
நடையார்நல
பவளத்துவர்
வாய்மேல்
விடந்தாங்கிய
கண்ணார்பயில்
வேணுபுர மதுவே. 3
90. தக்கன்றன
சிரமொன்றினை
யரிவித்தவன்
றனக்கு
மிக்கவ்வர
மருள்செய்தவெம்
விண்ணோர்பெரு
மானூர்
__________________________________________________
சண்டே-17) கிறி -
வஞ்சகம். புடைப்பாளை - பக்கங்களில் வெடித்து
மலர்ந்திருக்கின்ற பாளைகள். விடைத்தே -
வேறுபடுத்தியே, கமுகு புன்னைகளின் நாற்றத்தை
ஒன்றாகக் காட்டாது மிக்கு வேறு படுத்திக்
காட்டுகிறது.
3. பொ-ரை:
தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மதநீர் ஒழுகும்
யானையை அம்முனிவர்கள் வெருவுமாறு உரித்துப்
போர்த்தவரும், படத்தோடு கூடிய பாம்பைக் குழையாக
அணிந்தவரும் ஆகிய சிவபிரானது பழமையான ஊர்,
நடனத்துக்குரிய சதிகளோடு கூடிய நடையையும், அழகிய
பவளம் போன்ற சிவந்த வாயினையும் மேலான விடத்தன்மையோடு கூடிய கண்களையும் உடைய அழகிய
மகளிர் பலர் வாழும் வேணுபுரம் ஆகும்.
கு-ரை: கடம் - மதநீர்.
அவர் வெருவ - யானையை ஏவிய தாருகாவனத்து
முனிவர்களஞ்ச. பழவூர் என்றது மகாப்ரளய
காலத்திற்கும் தொன்மையதாதலின். நடந்தாங்கிய
நடையார் - நடனத்திற்கு ஏற்ற ஜதிவைப்பைத்
தாங்கிய நடையையுடையவர்கள். துவர் - சிவப்பு.
மேல்விடம் - மேலாகிய விடம். விடம்
உண்டாரையன்றிக் கொல்லாது; இது நோக்கினாரையும்
கொல்லும் ஆதலின் மேல்விடம் என்றார்.
வாய்மேல் (விடந்தாங்கிய) கண் எனலுமாம்.
4. பொ-ரை: தக்கனது
தலையை வீரபத்திரக் கடவுளைக் கொண்டு அரியச்
செய்து, பிழையை உணர்ந்து அவன் வேண்டிய
|