பக்கம் எண் :

 12. திருமுதுகுன்றம்367


128. அருகரொடு புத்தரவ

ரறியாவரன் மலையான்

மருகன்வரு மிடபக்கொடி

யுடையானிட மலரார்

கருகுகுழன் மடவார்கடி

குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமைபகர்

முதுகுன்றடை வோமே. 10

129. முகில்சேர்தரு முதுகுன்றுடை

யானைம்மிகு தொல்சீர்ப்

புகலிந்நகர் மறைஞானசம்

பந்தன்னுரை செய்த

நிகரில்லன தமிழ்மாலைக

ளிசையோடிவை பத்தும்

பகரும்மடி யவர்கட்கிடர்

பாவம்மடை யாவே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

10. பொ-ரை: சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரிய கூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

கு-ரை: புறச்சமயிகளால் அறியப்படாமை அறிவித்தவாறு. மலையான் மருகன் - இமவானுக்கு மருமகன். வருமிடபம் என்ற சொற்றொடர் இவர் பதிகங்களிற் பலவிடத்தும் வரல் கண்டு இன்புறற்பாலர் முதற்காட்சியதுவாதலின். கருகு குழல் - ஒருகாலைக்கொருகால் கருப்பு ஏறிக்கொண்டே போகின்ற குழல். கடிகுறிஞ்சி - தெய்வத் தன்மை பொருந்திய குறிஞ்சிப் பண், இப்பண்ணே முருகனது பெருமையைக் கூறுதற்கு ஏற்றதென்பது.

11. பொ-ரை: மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலி