பக்கம் எண் :

368திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


நகரில்தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

கு-ரை: நிகரில்லன தமிழ்மாலை என்றார்; ஒவ்வொரு திருப்பாடலின் முதலிரண்டடிக் கண்ணும் இறைவன் ஆன்மாக்களின் மலத்தைநீக்கி ஆட்கொள்ளும் முறைமையும், உபதேச குருமூர்த்தியாய் வந்தருளும் சிறப்பும், தானே முதல் என உணர்த்தும் தகுதியும் உணர்த்திப் பின்னிரண்டடிகளிலும் இயற்கையழகுகளின் வழியாக இறைவளத்தை யுணர்த்துதலின். இடர் - பாவம்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ்

முதுகுன்றை அடைவோம் என்

றெய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை

இசையொடும் புனைந்தேத்திச்

செய்த வத்திரு முனிவரும் தேவரும்

திசையெலாம் நெருங்கப்புக்கு

ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில்

ஆதரவுடன் சென்றார்.

- சேக்கிழார்.

மச்ச புராணம்

பொருகயற்க ணுமைமுலைப்பா லருந்தியருந்

தமிழ்ப்பதிகம் புரமூன் றெய்த

வொருவனைப்பா டிச்சமணக் குறும்பகற்றிக்

கைதவன்கூ னொழித்தே யென்பைத்

திருவுருவாச் செய்துசிவ சமயமே

சமயமெனச் செகத்தி லோங்கக்

கருணைபுரி பிரமபுரக் கௌணியர்கோன்

இருசரணங் கருத்துள் வைப்பாம்.

- வடமலையப்பப் பிள்ளையன்.