பக்கம் எண் :

 13. திருவியலூர்369


13. திருவியலூர்

பதிக வரலாறு:

திருமங்கலக்குடியை வணங்கிப் போந்த பிள்ளையார், திருவியலூருக் கெழுந்தருளி இறைவனை வணங்கிக் ‘குரவங்கமழ்‘ என்னும் இன்னிசை கூடும் இத்தமிழ்ப்பதிகத்தொடை சாத்த, இறைவன் அவருக்கு அருளார்திருவேடங் காட்டியருளினார். பிள்ளையார் வணங்கி உய்ந்தார். இதனைப் பிள்ளையார் இப்பதிக ஐந்தாம் பாட்டில், ‘கண்ணார்தரும் உருவாகிய கடவுள்‘ என்றும், ஒன்பதாம் பாட்டில், ‘உருவம் விளம்பட்டு அருள் செய்தான்‘ என்றும் குறிப்பித்தருளுகிறார்கள்.

பண் : நட்டபாடை

பதிக எண்: 13

திருச்சிற்றம்பலம்

130. குரவங்கமழ் நறுமென்குழல்

அரிவையவள் வெருவப்

பொருவெங்கரி படவென்றதன்

உரிவையுட லணிவோன்

அரவும்மலை புனலும்மிள

மதியும்நகு தலையும்

விரவுஞ்சடை யடிகட்கிடம்

விரிநீர்விய லூரே. 1

__________________________________________________

1. பொ-ரை: குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும்.

கு-ரை: குரவம் - குராமலர். அரிவை என்றது உமாதேவியை. சிவனுக்கு உமையம்மை வெருவ யானையை உரித்துப் போர்த்ததாகச் சொல்லுதல் வழக்கம். அரவு முதலியன விரவிய சடையென்பது தம்