| 
 
 131. ஏறார்தரு மொருவன்பல வுருவன்னிலை யானான் ஆறார்தரு சடையன்அனல் உருவன்புரி வுடையான் மாறார்புர மெரியச்சிலை வளைவித்தவன் மடவாள் வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 2 132. செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
 __________________________________________________ முள் மாறுபட்ட, பல பொருள்களும்
பகை நீங்கி வாழ்தற்கிடமாகிய சடை என்றவாறு. 2. பொ-ரை: எருதின்மேல் வருபவனும், பல்வேறு
மூர்த்தங்களைக் கொண்டவனும், என்றும் நிலையானவனும்,
கங்கையாற்றைச் சடையில் நிறுத்தியவனும், அனல் போன்ற
சிவந்த மேனியனும், அன்புடையவனும், பகைவராய் வந்த
அசுரர்தம் முப்புரங்கள் எரியுமாறு
வில்லை வளைத்தவனும், உமையம்மை பெருமிதம்
கொள்ளப் பல்வகைச் சிறப்புக்களோடு நிற்பவனுமாய
சிவபிரானுக்குரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும். கு-ரை: ஆர்தருதல் - ஊர்தல். பல
உருவன் - அடியார்கள் வேண்டிய வேண்டியாங்கு கொள்ளும்
வடிவங்களையுடையவன். அதாவது எம்போலியர்க்கு வினைவாய்ப்பால்
கிடைக்கும் உடல் போல்வதன்று, அவன் வடிவென்பது. நிலையானான் - என்றும் அழியாமல்
ஏனைய பொருள்கள் தத்தம் கால எல்லை வரை நிலைத்து
நிற்க ஏதுவானவன். புரிவுடையான் - அன்புடையான். ஆன்மாக்களிடத்துக்
காரணமின்றியே செலுத்தும் அன்புடையவன்
என்பது கருத்து. மாறார் - பகைவர். வீறு - பிறிதொன்றற்கில்லாத பெருமை. 3. பொ-ரை: சிவந்த மென்மையான
சடை தாழத் தாருகாவன முனிவர்களின் மனைவியர்
வாழ்ந்த இல்லங்கள்தோறும் சென்று |