144. பருமாமத கரியோடரி
யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி
யருவிக்கொடுங் குன்றம்
பொருமாவெயில் வரைவில்தரு
கணையிற்பொடி செய்த
பெருமானவ னுமையாளொடு
மேவும்பெரு நகரே. 4
145. மேகத்திடி குரல்வந்தெழ
வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குல மோடித்திரி
சாரற்கொடுங் குன்றம்
__________________________________________________
ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது
வளமையான நகராகும்.
கு-ரை: கிளர்கங்கை - பொங்கும் கங்காநதி.
மதமத்தம் - மதத்தை யூட்டும் ஊமத்தம்பூ.
4. பொ-ரை: பெரிய கரிய மத யானைகளும்
சிங்கங்களும் இரைதேடவும், நீர் பருகவும் இறங்கிவரும்
பெரிய மலைச்சாரலையும், நிறம் பொருந்திய பெரிய
மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும்
உடைய கொடுங்குன்றம், தன்னோடு பொரவந்த பெரிய
முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த
கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு
எழுந்தருளிய பெருநகராகும்.
கு-ரை: கரி - யானை. அரி - சிங்கம்.
இழியும் - இறங்குகின்ற சாரல். எனவே பகைகொண்ட
வலிவுள்ள யானையும் சிங்கமுமாகிய இவ்விரண்டின் வலிமையடங்க,
அருவி கிழித்துவருவது போல, கொடுங்குன்றச்சாரலை
அடையின் தம்முள் மாறுபட்ட ஆணவக்களிறும், ஐம்பொறிகளாகிய
அரிகளும் தம் வலிமையற்றுக் கருணையருவியின் வழியே
இழுக்கப்பட்டு அமிழ்த்தப்படும் என்பது அறிவித்தவாறாம்.
5. பொ-ரை: மேகத்திடம் இடிக்குரல்
தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள்
அஞ்சி மலையினின்றும்
|