நாகத்தொடும் இளவெண்பிறை
சூடிந்நல மங்கை
பாகத்தவ னிமையோர்தொழ
மேவும்பழ நகரே. 5
146. கைம்மாமத கரியின்னின
மிடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக
மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென வுள்கித்தொழு
வார்கட்கருள் செய்யும்
பெம்மானவ னிமையோர்தொழ
மேவும்பெரு நகரே. 6
__________________________________________________
இறங்கி வந்து ஓடித் திரியும் மலைச்சாரலை
உடைய கொடுங்குன்றம், நாகத்தோடு இளவெண்பிறையை
முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டுள்ள
சிவபிரான், தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும்
பழமையான நகராகும்.
கு-ரை: கூகைக்குலம் - கோட்டான்களின்
கூட்டம். கூகைகள் இருள்வாழ்க்கையுடையன.
அவைகள் மேக இடிக்குரல்கேட்டு அஞ்சி மலையை விட்டிறங்கிப்
புகலிடம் காணாது திரிகின்றன என்றது, அஞ்ஞானமாகிய
வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கருணைமழை
பொழியும் இறைவனது மறக்கருணை காட்டும் மொழியைக்கேட்டு
மலையை அணுகமுடியாதே அலைவர் என்று குறிப்பித்தவாறு.
நலமங்கை - அழகிய உமாதேவி.
6. பொ-ரை: துதிக்கையை உடைய கரிய
மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக்
கொய்யத்தக்க மணமலர்களை உடைய சோலைகளில் புகுந்து
ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம்,
இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும்
அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர்
தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.
கு-ரை: கைம்மா - யானை. வெளிப்படைமொழி.
யானை, இடியோசையைக்கேட்டுச் சோலைகளிற்
புகுகின்றன. இது நெறி
|