புத்தரொடு பொல்லாமனச்
சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன்
மேயபழ நகரே. 10
151. கூனற்பிறை சடைமேன்மிக
வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர்
தலைவன்னல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன
நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல
கேத்தும்மெழி லோரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு
அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான
நகராகும்.
கு-ரை: யானை ஆளிவர அஞ்சி,
மலையைக் குத்திக்கொண்டு குகையில் தங்குகின்றது
என்பதாம்.
11. பொ-ரை: வளைந்த பிறை மதியைச்
சடைமுடிமீது அழகு மிகுமாறு அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக்
கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட கழுமலமாநகரின்
தலைவனும் நல்ல கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய
ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை ஓதி வழிபட
வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள்
அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.
கு-ரை: கானல் - கடற்கரைச்சோலை.
தலைவன் நல்ல கவுணி - தலைவனாகிய நல்ல கவுண்டின்ய
கோத்திரத்துண்டானவன். ஊனம் - குறைபாடு.
எழில் - எழுச்சி.
|