பக்கம் எண் :

382திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



149. அறையும்மரி குரலோசையை

யஞ்சியடு மானை

குறையும்மன மாகிம்முழை

வைகுங்கொடுங் குன்றம்

மறையும்மவை யுடையானென

நெடியானென விவர்கள்

இறையும்மறி வொண்ணாதவன்

மேயவ்வெழில் நகரே. 9

150. மத்தக்களி றாளிவ்வர

வஞ்சிம்மலை தன்னைக்

குத்திப்பெரு முழைதன்னிடை

வைகுங்கொடுங் குன்றம்

__________________________________________________

கு-ரை: முட்டா - தடையில்லாத. முதுவேய்கள் - முதிர்ந்த மூங்கில்கள். யானைகள் மூங்கிலை முரித்து வைத்துக்கொண்டு சுனைகளில் ஆடுகின்றன. குட்டாச்சுனை - தானே ஆழமான சுனை என்பதாம். குட்டம் - ஆழம். குட்டா - ஆழமாக்கப்படாத. ஒட்டா - பொருந்தாத. பிட்டான் - இரண்டாக ஒடித்தான்.

9. பொ-ரை: சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம், வேதங்களுக்கு உரியவனாய நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகராகும்.

கு-ரை: அறையும் - முன்கால்களால் அறைந்து கொல்லும். அடும் ஆனை - கொல்லும் தன்மைவாய்ந்த மதயானை. குறையும் மனமாகி - வன்மைகுறைந்த மனத்தை யுடையவராகி. முழை - குகை. மறையும் அவை யுடையான் - வேதங்களை யுடையவனாய பிரமன். நெடியான் - திருமால் என்றது. இறையும் - சிறிதும்.

10. பொ-ரை: மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக் குத்திப் பெருமுழையாக்கி, அதனிடை வைகும் கொடுங்குன்றம், புத்தர்களும் பொல்லா