பக்கம் எண் :

392திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


16. திருப்புள்ளமங்கை

பதிக வரலாறு:

வேதங்களில் சொல்லப்பட்ட அருங்கருத்துக்களின் உள்ளீடாகிய சிவஞானம் தம்மறிவில் நிரம்பப்பெற்ற பிள்ளையார் திருச்சக்கரப்பள்ளியை வணங்கிக் கொண்டு வயற்கரை வழியாகப் புள்ளமங்கையை அடைந்தார்கள். அங்கேயுள்ள ஆலந்துறை என்னும் திருக்கோயிலுக்குச் சென்றார்கள். இறைவன் திருவடித்தலத்தை அன்போடு வணங்கிப் ‘பாலுந்துறுதிரளாயின‘ என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

பண்: நட்டபாடை

பதிக எண்: 16

திருச்சிற்றம்பலம்

163. பாலுந்துறு திரளாயின

பரமன்பிர மன்றான்

போலுந்திற லவர்வாழ்தரு

பொழில்சூழ்புள மங்கைக்

காலன்றிற லறச்சாடிய

கடவுள்ளிடங் கருதில்

ஆலந்துறை தொழுவார்தமை

யடையாவினை தானே. 1

__________________________________________________

1. பொ-ரை: பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப் புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் விளங்குபவரும் ஆகிய இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.

கு-ரை: பால் உந்து உறுதிரள் - பாலைக் கடைதலால் விளைந்த வெண்ணெய். பிரமன் தான் போலுந்திறலவர் - பிரமனும் அவன் போலும் தன்மையினராகிய அந்தணரும். ஆலந்துறை கோயிலின் பெயர்; புள்ளமங்கை தலத்தின் பெயர். இதனை "புளமங்கை ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின்" என்ற இப்பதிகம் பத்தாம்