| 
 கமழும் காழிப் பதியில் தோன்றிய
கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த
இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பரவசமாய் ஆடத்
தவம் கைகூடும். கு-ரை: பொந்து - மரப் பொந்துகள்.
இப்பதிகச் சந்தம், படிக்குங் காலத்தேயே
பரவசமாய் ஆட வருந்தன்மையது என்பது குறித்தவாறு. 
  
  
    
      | பேரூர்ப் புராணம் தவந்த வென்பினைப் பெண்ணெனப்
படைத்தும் சார்மழவன்உவந்த பெண்ணுயி ரளித்துமொட் டாதெதிர் புத்தன்
 நிவந்த சென்னியை யுருட்டியு முத்தொழில் நிறுவிப்
 பவந்த டுத்துயிர்க் கருளுஞ்சொற் பனவனைப் பணிவாம்.
 - கச்சியப்ப முனிவர். திருவானைக்காப் புராணம் மழலை யின்னமு தூற்றெழு
மாசைவள் ளத்துக்குழலின் மென்மொழி யுமையவள் கொடுத்தபால் கமழப்
 பழகு செந்தமிழ்ப் பாடலந் தேன்வடிந் தாடு
 மழக னஞ்செவி யூட்டிய அறிஞனை யடுப்பாம்.
 - கச்சியப்ப சுவாமிகள். சங்கற்ப நிராகரணம் ஈசனரு ளாலெரியிட் டேடெடுத்து
வாதுவென்றபூசுரனைப் பாதநினைப் பாம்.
 - உமாபதி சிவாசாரியார். |  |