பக்கம் எண் :

400திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


17. திருஇடும்பாவனம்

பதிக வரலாறு:

சிவபெருமான் மிக விரும்பிய தலமாகிய ‘திருக்கடிக்குளம்‘ என்னுந்தலத்தை வணங்கிப் பிள்ளையார் இடும்பாவனத்தை எய்தினார்கள். அங்கே எழுந்தருளிய சுவாமிகள் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சற்குணநாதரை ‘மனமார்தரு‘ என்னும் பதிகம்பாடி வணங்கினார்கள். இதில் இடும்பன் தலைநகரமாகிய கொடிமாடக் குன்றளூரையும் சேர்த்துக் குறிப்பிட்டிருத்தல் காண்க.

பண் : நட்டபாடை

பதிக எண்: 17

திருச்சிற்றம்பலம்

174. மனமார்தரு மடவாரொடு

மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்

தனமார்தரு சங்கக்கடல்

வங்கத்திர ளுந்திச்

சினமார்தரு திறல்வாளெயிற்

றரக்கன்மிகு குன்றில்

இனமாதவ ரிறைவர்க்கிடம்

இடும்பாவன மிதுவே. 1

__________________________________________________

1. பொ-ரை: மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப் பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.

கு-ரை: மனம் ஆர்தரு மடவார் - மனம் பொருந்திய சிறு பெண்கள். குன்றில் - குன்றளூரில். இது இடும்பன் தலைநகரம், மத்தியிலுள்ள தனம் ஆர்தரு குன்றில், உந்தி மிகு குன்றில், எனத் தனித்தனிக்