| 
 293. மாட மல்கு மதில்சூழ்
காழிமன்சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
 நாட வல்ல ஞான சம்பந்தன்
 பாடல் பத்தும் பரவி வாழ்மினே. 11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ பிண்டமுண்ணுதல் - சுவைத்து மென்றுதின்னாது
விழுங்குதல். பிராந்தர் - மயக்க அறிவினர். 11. பொ-ரை: மாடவீடுகளால் நிறையப் பெற்றதும்
மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதிக்குத்
தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன்,
பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர்
இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக. கு-ரை: இது இப்பதிகத்தை ஓதின் வாழலாம்
என்கின்றது. சேடர்க்கு முன்னுரைத்தாங்கு உரைக்க.
பத்தும் பரவி - பத்தாலும் தோத்திரித்து. 
  
  
    
      | திருப்புகழ் புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே சமரிலெதிர்த் தசுரர்மாளத் தனியயில்விட் டருள்வோனே நமசிவாயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே. - அருணகிரிநாதர். |  |