| 
 362. இடியார் குரலே றுடையெந்தைதுடியா ரிடையா ளொடுதுன்னுங்
 கடியார் பொழில்சூழ் தருகாழி
 அடியா ரறியா ரவலம்மே. 3
 363. ஒளியார் விடமுண் டவொருவன்அளியார் குழன்மங் கையொடன்பாய்க்
 களியார் பொழில்சூழ் தருகாழி
 எளிதா மதுகண் டவரின்பே. 4
 364. பணியார் மலரார்
தருபாதன்முனிதா னுமையோ டுமுயங்கிக்
 __________________________________________________ 3. பொ-ரை: இடியை ஒத்த குரலையுடைய
இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய
இறைவன், துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு
எழுந்தருளியிருப்பதும், மணம் பொருந்திய
பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை
வணங்கும் அடியவர்கள், துன்பத்தை அறியார்கள். கு-ரை: இது காழி அடியார் அவலம் அறியார்
என்கின்றது. இடியார் குரல் ஏறு - இடியையொத்த
குரலுடைய இடபம். துடி - உடுக்கை, எந்தை துன்னும் காழி
அடியார் அவலம் அறியார் எனக்கூட்டுக. 4. பொ-ரை: நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால
விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான்,
வண்டுகள் மணத்தைத் தேடி வந்து நாடும் கூந்தலை உடைய
உமையம்மையோடு, அன்புடன் களிக்கும், பொழில்கள்
சூழ்ந்த காழிப்பதியைக் கண்டவர்க்கு இன்பம் எளிதாம். கு-ரை: இது காழி கண்டவர்க்கு இன்பம்
எளிதாம் என்கின்றது. ஒளியார் விடம் - நீலஒளியோடுகூடிய
விடம். அளி - வண்டு. ஒருவன் மங்கையொடு அன்பாய்க்
களி ஆர் காழி கண்டவர் இன்பம் எளிதாம் என முடிவு செய்க. 5. பொ-ரை: தண்மை பொருந்திய தாமரை
மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான் உமையம்மையோடு
கூடி உலக |