| 
 வெருள்செய் தவன்வீ
    ழிம்மிழலைதெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 9
 380. துளங்குந் நெறியா
    ரவர்தொன்மைவளங்கொள் ளன்மின்புல் லமண்டேரை
 விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
 உளங் கொள் பவர்தம் வினையோய்வே.
    10
 381. நளிர்கா ழியுண்ஞா
    னசம்பந்தன்குளிரார் சடையா னடிகூற
 மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
 கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.
    11
 திருச்சிற்றம்பலம் __________________________________________________ நின்று வெருட்டியவனும் பின் அவர்க்கு
அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச்
சிறந்த தலம் என்று தெளிந்தவர்கள் தீவினைகள் தேய்தல்
உறும். கு-ரை: இத்தலத்தைத் தெளிந்தவர்களது
தீவினை தேயும் என்கின்றது. இருவர் மருள்செய்து மயலாக
- மாலும் அயனும் அஞ்ஞானத்தால் மயங்க. வெருள்செய்தவன்
- வெருட்டியவன், தெருள்செய்தவர் - தெளிந்தவர்கள். 10. பொ-ரை: தடுமாற்றமுறும் கொள்கைகளை
மேற் கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின்
சமயத்தொன்மைச் சிறப்பைக் கருதாதீர்.
விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை
நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும். கு-ரை: இத்தலத்தைத் தியானிப்பவர்களின்
வினை ஓயும் என்கின்றது. துளங்கும் நெறியார் -
அளவைக்கும் அநுபவத்திற்கும் நிலைபெறாது அசையும்
சமயநெறியை யுடையவர்கள். தேரை - தேரரை என்பதன்
சிதைவு. 11. பொ-ரை: குளிர்ந்த காழிப் பதியில்
தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை
உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி
விளக்கமான பொழில்கள் |