பக்கம் எண் :

 36. திருவையாறு533


சூழ்ந்த திருவீழிமிழலைப் பெருமான் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை.

கு-ரை: இது இப்பாடலை வல்லார்க்குக் கேடு இல்லை எனப்பயன் கூறுகிறது. நளிர் - குளிர்.

திருத்தொண்டர் புராணம்

திருஞானசம்பந்தர் புராணம்

அப்போ தரையார் விரிகோ வணஆடை
ஒப்போ தரும்பதிகத் தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார் தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற் கொண்டு கவுணியனார்.

- சேக்கிழார்.

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலுங் கால்பரப்பிட்
டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன்றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் றன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனிஇன் றுறுகின்றதே.

- நம்பியாண்டார் நம்பி.