|
திருநல்லூர்ப் பெருமணப் புராணம்
சோணாடு தனக்கெழிலாம் புகலிதனிற்
கவுணியர்பாற் றோன்றிநீடு
கோணாக மணிதருசெஞ் சடைப்பெருமான்
அருண்மேவிக் குவலயத்துள்
மாணாருஞ் சைவநெடுஞ் சுடரேற்றிச்
சமணிருளின் வலிமைநீக்கி
ஆணான பெண்ணையுறு பெண்ணாகச்
செய்தவர்தா ளகத்துள் வைப்போம்.
-சிவக்கொழுந்து தேசிகர்.
மயூராசலப் புராணம்
தழுதழுப்ப அழுமகவு பாலருந்தும்
எனுமொழிக்குச் சான்றேயாகத்
தொழுதகுதந் தையைக்காணா தழுதிரிய
பரசுகத்திற் றொடக்குண் டன்பால்
முழுமலமா யையைநீக்கு ஞானப்பால்
உமையருள முன்னந்தேக்கும்
கழுமலப்பே ரூரின்வரும் பிள்ளையடி
உள்ளிவினைக் கரிசு தீர்ப்பாம்.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
|