பக்கம் எண் :

 39. திருவேட்களம்551


39. திருவேட்களம்

பதிக வரலாறு:

ஆனந்தக் கூத்தப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற கனகசபையைத் தொழுது, வெளியே போகின்றவர்கள், திருமுன்னிலையையும், திருவாயிலையும் வணங்கி, திருவீதிகளையும் தொழுது அங்கே இராத்தங்க அஞ்சுவார்களாகத் திருவேட்களத்தை யடைந்தார்கள். அங்கே பாசுபதநாதரைக் கைதொழுது ‘அந்தமும் ஆதியுமாகிய’ என்னும் இந்தச் சொற்பதிகத்தை அருளிச்செய்து, அத்தலத்தையே தங்குமிடமாகக் கொண்டு தில்லையைத் தரிசித்து வருவாராயினர்.

பண்: தக்கராகம்

பதிக எண்:39

திருச்சிற்றம்பலம்

415. அந்தமுமாதியு மாகியவண்ணல்

ஆரழலங்கை யமர்ந்திலங்க

மந்தமுழவ மியம்ப

மலைமகள் காணநின்றாடிச்

சந்தமிலங்கு நகுதலைகங்கை

தண்மதியம் மயலேததும்ப

வெந்தவெண் ணீறுமெய்பூசும்

வேட்கள நன்னகராரே. 1

__________________________________________________

1. பொ-ரை: உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவருமாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய கையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபாலமாலை, கங்கை, தண் பிறை ஆகிய தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.

கு-ரை: வேட்களாநாதர் அழல் அங்கையில் தயங்க, கங்கையும் கபாலமும் மதியமும் விளங்க, மலைமகள் காண நின்றாடுவர் என்கின்றது. அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் - காணப்பட்ட