| 
 
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 9 524. மாசடைந்த மேனியாரு மனந்திரி யாதகஞ்சி நேசடைந்த வூணினாரு நேசமிலாததென்னே வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த் தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. 10 கு-ரை: அயனும் மாலும் பறந்தும் தோண்டியும்
காணக் கிடையாத தேவரீர் அவர்கள் திருந்தி வந்தகாலத்து
அருள்வழங்கியது ஏன் என்கின்றது. கார் - கருமைநிறம். கனகம் அனையான்-பொன்
நிறமுடைய பிரமன். சீர் அடைந்து - தாம் முதலல்ல
‘என்றும் மீளா ஆளாவோம்’ என்ற உண்மை உணர்ந்து.
மறுகு - வீதி. 10. பொ-ரை: வீசி ஆடுகின்ற தோகைகளை
உடைய மயில்கள் ஆடுவதும், மணம் கமழும்
பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும்
செய்யும் திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! அழுக்கேறிய
உடலினரும், மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை
விரும்பி உணவாகக் கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள்
உன்பால் நேசம் இலாததற்குக் காரணம் யாதோ? கு-ரை: புத்தரும் சமணரும் தேவரீரிடத்து
அன்பு கொள்ளாதது என்னே என்கின்றது. மாசு - அழுக்கு. நேசடைந்த - அன்புகொண்ட.
வீசடைந்த தோகை -வீசியாடுகின்ற மயில். தேசு - ஒளி. |