| 
 
621. மாறி லாமல ரானொடு மாலவன்வேற லானுறை வேற்காடு
 ஈறிலாமொழி யேமொழி யாவெழில்
 கூறி னார்க்கில்லை குற்றமே. 10
 622. விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடுகண்டு நம்பன் கழல்பேணிச்
 சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
 கொண்டு பாடக் குணமாமே. 11
 _______________________________________________
 திருச்சிற்றம்பலம் பிரமனார். விரக்கினான் -
சாமர்த்தியமுடையன். விரகினான் என்பது எதுகை
நோக்கி விரிந்தது. 10. பொ-ரை: ஒப்பற்ற தாமரை மலர்
மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை
வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும்
திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலா
மொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக்
கூறுபவர்களுக்குக் குற்றமில்லை. கு-ரை: இறைவனைப்பற்றிய மொழியே
ஈறிலாமொழியாக அதனை அழகுபெறக் கூறினார்க்குக்
குற்றமில்லை என்கிறது. வேறலான் -
வெல்லுதலையுடையான். வேறாகாதவன் எனலுமாம். 11. பொ-ரை: விரிந்த மலர்களையுடைய
மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து,
அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி,
சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்
உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்
போற்றுவார்க்கு நன்மைகள் விளையும். கு-ரை: திருவேற்காட்டைத் தரிசித்து
இறைவன் திருவடியைத் தியானித்து இப்பதிகத்தைப்
பாடக் குணமாம் என்கின்றது. விண்ட - மலர்ந்த
சண்பை சீகாழிக்கு மறுபெயர். |