| 
 58. திருக்கரவீரம் பதிக வரலாறு. திருஞானசம்பந்தசுவாமிகள்
திருச்சாத்தங்குடி சென்று பெருமானை வணங்கிய
பின்பு, திருக்கரவீரத்தையடைந்து நம்பர்தாளை
வணங்கி ‘அரியும் நம்வினை‘ என்னும்
இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள். பண்: பழந்தக்கராகம் பதிக எண் : 58 திருச்சிற்றம்பலம் 
623. அரியு நம்வினை யுள்ளன வாசறவரிகொண் மாமனி போற்கண்டம்
 கரிய வன்றிகழுங்கர வீரத்தெம்
 பெரிய வன்கழல் பேணவே. 1
 624. தங்கு மோவினை தாழ்சடை மேலவன்திங்க ளோடுடன் சூடிய
 கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
 சங்க ரன்கழல் சாரவே. 2
 _______________________________________________
 1. பொ-ரை: வரிகள் அமைந்த சிறந்த
நீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும்
திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள
எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால்
நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும். கு-ரை: கரவீரத்து இறைவன்கழல் பேண
வினையுள்ளன எல்லாம் அரியும் என்கின்றது.
கழல்பேண நம்வினையுள்ளன அரியும் எனக்கூட்டுக.
வரிகொள் மாமணி - நிறங்கொண்ட நீலமணி. 2. பொ-ரை: தாழ்ந்து தொங்கும்
சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு
கங்கையை உடனாகச் சூடிய, திருக் கரவீரத்தில்
விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால்
நம்மைப் பற்றிய வினைகள் தங்கா. |