| 
 625. ஏதம் வந்தடை யாவினி நல்லனபூதம் பல்படை யாக்கிய
 காத லான்றிக ழுங்கர வீரத்தெம்
 நாதன் பாத நணுகவே. 3
 626. பறையு நம்வினை யுள்ளன பாழ்படமறையு மாமணி போற்கண்டம்
 கறை வன்றிக ழுங்கர வரரத்தெம்
 இறைய வன்காழ லேத்தவே. 4
 627. பண்ணி னார்மறை பாடல னாடலன்விண்ணி னார்மதி லெய்தமுக்
 கண்ணி னானுறை யுங்கர வரரத்தை
 நன்ணு வார்வினை நாசமே. 5
 _______________________________________________
 கு-ரை: சங்கரன் கழல்சார வினை
தங்குமோ என வினாவுகிறது. சங்கரன் - சுகத்தைச்
செய்பவன். 3. பொ-ரை: நல்லனவாகிய பூத
கணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக்
கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும்
திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான
சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள்
வந்தடையமாட்டா. கு-ரை: கரவீரநாதன் பாதன் நணுக ஏதம்
அடையா என்கின்றது. ஏதம் - துன்பம். 4. பொ-ரை: நீலமணி போலக்
கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும்
திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய
பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும்.
சஞ்சிதமாக உள்ளவும் மறையும். கு-ரை: கழல் ஏத்த வினைபறையும்
என்கின்றது. பறையும் என்றதோடமையாது பாழ்பட
பறையும் என்றது அதன் வாசனையும் கெடும் என்பதை
விளக்க. 5. பொ-ரை: சந்த இசையமைப்புடன் கூடிய
வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும்,
வானகத்தில் சஞ்சரித்த மும்மதில். |