| 
 
676. தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே யேத்துமின்கள் நடுக்கமிலா வமருலகம் நண்ணலுமா மண்ணல்கழல் கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. 10 677. நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும் கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை __________________________________________________ பத்திரன் அன்போடு பாடுதலும் அருள்
சுரந்து பரிசில் பல அளித்தவன் இவன் என்கின்றது.
நாணம் உடை வேதியன் - அறிய முடியாமையால் வெட்கமுற்ற
பிரமன். தலைபோனமையால் வெட்கிய என்றுமாம். தாணு
- நிலைத்தபொருள். பாணன் - பாணபத்திரன். பரிந்து
- விரும்பி. 10.
 பொ-ரை: தடுக்கை உடையாக
விரும்பும் சமணரும், தர்க்க சாத்திரங்களில் வல்ல
புத்தர்களும் கூறுகின்ற இடுக்கண் வளரும் மொழிகளைக்
கேளாது ஈசனையே ஏத்துமின்கள். துளங்காது அமரர்
வாழும் வானுலகத்தை அடைதலும் கூடும். அப்பெருமான் திருவடிகள்,
வேறு யாராலும் தர இயலாத வரங்கள் பலவற்றையும்
தரும். அவ்விறைவன் திருக்கோளிலி எம்பெருமான்
ஆவான். கு-ரை: சமணர்களும் தார்க்கீகர்களும்
கூறும் துன்பவார்த்தைகளைக் கேளாமல் ஈசனையே ஏத்துங்கள்;
வானுலகை அடையலாம்; அவன் கழல் அரிய வரங்களையும்
கொடுக்கும் என்கின்றது. தடுக்கு அமரும் - தடுக்கை
ஆசனமாக விரும்புகின்ற. தர்க்க சாஸ்திரிகளும் நாஸ்திகர்கள்
ஆதலின் அவருரையும் கேளாதீர் என்றார். 11. 
பொ-ரை: நல்ல
அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு
போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில்
விளங்கும் எம் பெரு |