| 
 
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண் டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே. 11 திருச்சிற்றம்பலம் __________________________________________________ மானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப்
பதியுள் தோன்றிய ஞான சம்பந்தன் பாடிய இத்தமிழ்ப்
பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாட வல்லவர்கள்
அப்பெருமானையே அடைவர். கு-ரை: நல்ல அடியார்கள் ஒவ்வொருவரும்
நம்முடைய செல்வம் என்று நம்பியிருக்கும்
கோளிலிப்பெருமானை ஞானசம்பந்தன் அருளிய வண்டமிழ்கொண்டு
இன்பங்கொள்ள வல்லவர்கள் ஈசனை எய்துவர் என்கின்றது.
கொம்பு அனையாள் - பூங்கொம்பை ஒத்த உமாதேவி. வம்பு
- மணம். இன்பு அமர - இன்பத்து இருக்க. 
  
  
    
      | திருக்கழுமல மும்மணிக்கோவை தாதையொடு வந்த வேதியச்
  சிறுவன்தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
 அன்னா யோவென் றழைப்பமுன் னின்று
 ஞானபோ னகத்தருள் அட்டிக் குழைத்த
 ஆனாத் திரளை அவன்வயின் அருள
 அந்தணன் முனிந்து தந்தா ரியாரென
 அவனைக் காட்டுவன் அப்ப வானார்
 தோடுடைய செவியன் என்றும்
 பீடு டைய பெம்மான் என்றும்
 கையிற் சுட்டிக் காட்ட
 ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
 - பட்டினத்துப்
பிள்ளையார். |  |