பக்கம் எண் :

742திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


63. திருப்பிரமபுரம்

குருவருள்: ஞானசம்பந்தர் அவதரித்த சீகாழிப் பதிபன்னிரு திருப் பெயர்களை உடையது. ஆளுடைய பிள்ளையார் அப்பன்னிரு திருப்பெயர்களைத் தனித்தனியே குறிப்பிட்டுப் பதிகங்கள் அருளியிருப்பதோடு, பன்னிரு பெயர்களுக்குப் பன்னிரு திருப்பாடல்களைக் கொண்ட 11 திருப்பதிகங்கள் அருளியுள்ளார். அத்தகைய பதிகங்களில் ஒன்றாய் அப்பெயர்கள் அமைதற்குரிய புராண வரலாற்றுக் குறிப்புக்களுடன் இப்பல்பெயர்ப் பத்து அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில் பிரமபுரம் முதலாக ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு தலம் வருமாறு பன்னிரு பெயருக்கும் பன்னிரு பாடல்கள் அமைந்துள்ளன.

பல்பெயர்ப்பத்து

பண் : தக்கேசி

பதிக எண்: 63

திருச்சிற்றம்பலம்

678. எரியார்மழுவொன் றேந்தியங்கை

யிடுதலை யேகலனா

வரியார்வளையா ரையம்வவ்வாய்

மாநலம் வவ்வுதியே

சரியாநாவின் வேதகீதன்

தாமரை நான்முகத்தன்

பெரியான்பிரமன் பேணியாண்ட

பிரம புரத்தானே. 1

__________________________________________________

அகத்துறைப் பதிகம் : சீகாழிப் பதியின் பன்னிரு பெயர்களைத்

தனித்தனியே ஒவ்வொரு பாடலிலும் குறிக்கும் பல்பெயர்ப் பத்து.

1. பொ-ரை: உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேத கீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கல