| 
 
    980. தொழும னத்தவர், கழும லத்துறைபழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 12
 திருச்சிற்றம்பலம் ____________________________________________________ ஓரும் - தியானிக்கும். 12. பொ-ரை: கழுமலத்தில் உறையும் குற்றமற்ற
ஞான சம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப்
பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர்
ஆகுக. கு-ரை: பழுது - குற்றம். கழுமலம் - சீகாழி. 
  
  
    
      | திருவிசைப்பா எம்பந்த வல்வினைநோய்
      தீர்த்திட் டெமையாளும்சம்பந்தன் காழியர்கோன் 
      றன்னையும் ஆட்கொண்டருளி
 அம்புந்து
      கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
 செம்பொன்செய்
      அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.
  -
      பூந்துருத்தி நம்பிகாட நம்பி. |  |