| 
 
    1043. தூர்த்த னைச்செற்ற, தீர்த்த னன்னியூர்ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 8
 1044. இருவர் நாடிய, அரவ னன்னியூர்பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே. 9
 1045. குண்டர் தேரருக்கு, அண்ட னன்னியூர்த்தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 10
 1046. பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்வேந்த னன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 11
 திருச்சிற்றம்பலம் ____________________________________________________ 8. பொ-ரை: காமாந்தகனாகிய
இராவணனைத் தண்டித்த புனிதனாகிய அன்னியூர்
இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப்
போற்றி வாழுங்கள். கு-ரை: தூர்த்தன் - காமியாகிய
இராவணன். தீர்த்தன் - பரிசுத் தமானவன். ஆத்தமா -
அன்போடு. ஆப்தமாக என்பதன் சிதைவு. 9. பொ-ரை: திருமால் பிரமர்களால்
அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட
அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர்
தேவருலகில் இந்திரராவர். கு-ரை: விண்ணுக்கு ஒருவராவர் -
இந்திரனாவர். 10. பொ-ரை: சமணர்களாலும்
புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர்
இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள்
விண்டு போகும். கு-ரை: அண்டன் - அண்டமுடியாதவன்,
வினை விண்டு போகும் - நெல் வாய் விண்டதுபோல
வினை முளைக்குந் தன்மையழியும். 11. பொ-ரை: பூந்தராய் என்னும்
சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்
ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர்
வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து
வாழ்வீர்களாக. கு-ரை: பந்தன் - ஞானசம்பந்தன்
என்பதன் முதற்குறை. பூந்தராய் - சீகாழி. |