பக்கம் எண் :

 97. திருப்புறவம்967


97. திருப்புறவம்

பண்:குறிஞ்சி

பதிக எண்:97

திருச்சிற்றம்பலம்

1047. எய்யாவென்றித் தானவரூர்மூன்

றெரிசெய்த

மையார்கண்டன் மாதுமைவைகுந்

திருமேனிச்

செய்யான் வெண்ணீறணிவான் றிகழ்பொற்

பதிபோலும்

பொய்யாநாவி னந்தணர்வாழும்

புறவம்மே. 1

1048. மாதொருபாலு மாலொருபாலும்

மகிழ்கின்ற

நாதனென்றேத்து நம்பரன்வைகுந்

நகர்போலும்

___________________________________________________

1. பொ-ரை: பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும் சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன், உமையம்மையை ஒருகூறாகக்கொண்டு எழுந்தருளும், செய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும்.

கு-ரை: புறவம் திரிபுரம் எரித்த நீலகண்டர்பதிபோலும் என்கின்றது. எய்யா வென்றி - இளையாத வெற்றியையுடைய. தானவர் - அசுரர்கள். மை - விடம். பொய்யாநாவின் அந்தணர் - பொய்யே சொல்லாத நாவினை உடைய அந்தணர். அவர்கள் கூறும் உரை, தவறாத நா என்றுமாம்.

2. பொ-ரை: குருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும், அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரிந்த மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கை