| 
 
      கேத்தவெளிப்பா டெய்தியவன்ற னிடமென்பர் பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே. 9 1056. வையகநீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான் மெய்யலதேர ருண்டிலையென்றே நின்றேதங் கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர் பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே. 10 
        1057. பொன்னியம்மாடப் புரிசைநிலாவும் புறவத்து மன்னியவீசன் சேவடிநாளும் பணிகின்ற ____________________________________________________ கு-ரை: அயனும் மாலும் அறியாத
பெருமான் இடம் புறவம் என்கிறது. மூர்த்தியை -
உருவங்கொண்ட இறைவனை. 10. பொ-ரை: மண், நீர், தீ, காற்று,
விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின்
முதலாக விளங்கும் இறைவனாய்,
உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற
உரைகளால் அத்தி நாத்தி எனக் கூறிக் கொண்டு தம்
கைகளில் உணவேற்று உண்போராய சமணரும், புத்தரும்
காண ஒண்ணாத சிவபிரானின் நகர், நெஞ்சிலும்
பொய்யறியாத பூசுரர் வாழும் புறவமாகும். கு-ரை: ஐம்பெரும் பூதமானவனும்
புறச்சமயிகளால் பொருந்த ஒண்ணாதவனுமாகிய
இறைவன் நகரம் புறவம் என்கின்றது. வையகம் - மண்.
உண்டு இலை என்று - அஸ்தி நாஸ்தி கூறி. பூசுரர் -
அந்தணர். 11. பொ-ரை: பொன்னால் இயன்ற
மாடங்களின் மதில்கள் சூழ்ந்த, புறவம் என்னும்
பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின்
சேவடிகளை, நாள்தோறும் பணிந்து, சீவபோதம்
அற்றுச் சிவபோதம் |