| 
 
        தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன் இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே. 11 திருச்சிற்றம்பலம் ___________________________________________________ உடையவனாய்ப் போற்றும் சண்பையர்
தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன்,
இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள்
பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும். கு-ரை: புறவத்து ஈசனை, இப்பதிகம்
சொல்லி ஏத்த வல்லாருக்கு இடர்போம்
என்கின்றது. தன்னியல்பில்லாச் சண்பையர் கோன்
- சீவபோதமற்ற திருஞானசம்பந்தர். 
  
  
    
      | நால்வர் நான்மணி மாலை  கொள்ளைகொள்ள
        வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்தள்ளுந் திருஞான சம்பந்தா - வெள்ளமிடும்
 ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்
 காடேறப்
      புக்கவரு கர்.
 வானும் புகழ்புகலி
        மன்னன் றொடர்பொன்றுதேனுந் திதழியோன் சீரேடு - தானுங்
 கரியாய் மொழியுங் கரியாய் விடாம
 லெரியா ரழல்வீழ்ந் தெழுந்து.
 அறத்தா
        றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்
 பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
 றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து.
  - சிவப்பிரகாச
      சுவாமிகள். |  |