| 
 
1077. அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப வரும்பீன்று குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம் பிரமன்னோடு மாலறியாத பெருமையெம் பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள். 9 1078. பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக் குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம் இருந்துண்டேரு நின்றுண்சமணு மெடுத்தார்ப்ப அருந்தண்மேய நன்னகர்போலு மடியீர்காள். 10 ___________________________________________________ 9. பொ-ரை: பணியும் தொண்டர்களே!
பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை
ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை
போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம்.
பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன்
மேவியுள்ள நன்னகராகும். கு-ரை: குரவம்பாவை பாம்பின்
பல்லைப்போல் அரும்பீன்று மணங்கமழும் சோலை
சூழ்ந்த குற்றாலம், அயனும் மாலும் அறியாத பரமன்
நகர் என்கின்றது. முள் எயிறு - முள் போன்ற பல். 10. பொ-ரை: அடியவர்களே! பெரிய
தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய
வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த
மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும்
குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று
உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய
சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும். கு-ரை: வண்டு பெண் வண்டைப்
புணர்ந்து செவ்வழிப் பண்ணைப் பாடும் குற்றாலம்,
தண்ணிய இறைவன் மேய நகர் |