|
7.
மதுரைக் கலம்பகம்: 8. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்: இவ்விரு
நூல்களும் குமரகுருபர அடிகளாரால் இயற்றியருளப் பெற்றன. இவைகளன்றி
மதுரைக் கோவை, மதுரைச் சொக்கநாதர் உலா, தமிழ்விடுதூடு முதலிய
பலபிரபந்தங்களும் இறையனார் அருளிய களவியலும் (அகப்பொருள்
இலக்கணம்) இத்தலத்தின் சிறப்பிற்கு உரியன.
திருஞானசம்பந்தப்
பெருந்தகையார் அம்பிகை சிவஞானம் குழைத்து
அருளிய இன்னமுதை உண்டவர். அவர் கடவுளைத் தவிர வேறு யாரையும்
பாடாதவர். அவர், இப்பதியில், மங்கையர்க்கரசியாரை நோக்கி, உமைக்
காண வந்தனம் என்றதோடு அவரைத் திருப்பதிகத்துள் வைத்துப்
பாடியருளியுள்ளார்கள். ஆதலால், மங்கையர்க்கரசியார் பெருஞ்சிறப்பு
வாய்ந்தவர் என்பது பெறப்படுகிறது. மங்கையர்க்கரசியாரையும்,
குலச்சிறையாரையும் பதிகத்தில் வைத்துப் பாடும்பொழுது, மங்கையர்க்
கரசியாரைக் குறிக்குங்கால் சிவன், உமை இவர்களோடு தொடர்புபடுத்திக்
கூறியுள்ளார். குலச்சிறை யாரைக் குறிக்கும்பொழுது
சிவபெருமானோடுமாத்திரம் தொடர்பு படுத்திக் கூறி்யுள்ளார். இவற்றால்
மங்கையர்க்கரசியார் தம் கணவரோடு வாழவேண்டுமென்று, ஞானசம்பந்தர்
திருவுளங் கொண்டதாகத் தோன்றுகின்றது. இக்கருத்தைத்தான் பையவே
சென்று பாண்டியற்காகவே என்ற அவரது தேவாரப் பகுதியும்
தெரிவிக்கின்றது.
மங்கையர்க்கரசியார்
திருநீறு அணிந்திருந்த செய்தி முத்தின்
தாழ்வடமுஞ் சந்தனக்குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார்கின்ற
பாண்டிமாதேவி என்னும் ஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால்
அறியக்கிடக்கின்றது.
நுணுகி ஆராயின்
இவைபோன்ற பல உயரிய செய்திகளை இத்தலத்துத்
தேவாரப் பதிகங்களால் அறியலாம்.
13.
திருஆனைக்கா
யானை
பூசித்துப் பேறு எய்தியதால் இப்பெயர் பெற்றது.
திருவானைக்கா
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரி வடகரையில்
விளங்கும் தலம். திருச்சிராப்பள்ளியிலிருந்து நகரப் பேருந்துகள் பல
உள்ளன.
|