|
இறைவரின்
திருப்பெயர்: நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த்
திருத்தாண்டகத்தில் அப்பர்பெருந்தகையார் செழுநீர்த் திரளைச் சென்று
ஆடினேனேஎன எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று
வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்தின் அருகில்
எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு-நாவல்) இறைவியாரின்
திருப்பெயர்: அகிலாண்டநாயகி.
தலவிருட்சம்
வெண்ணாவல்.
தீர்த்தங்கள்
காவிரி, இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம், என்பன.
கோயில் ஐந்துபிராகாரம்
கொண்ட பெரியகோயில், ஆயிரங்கால்
மண்டபம் உண்டு. முதல் மண்டபம் மிகச் சிறந்தது. சுவாமி சந்நிதி மேற்கு,
அம்மன் சந்நிதி கிழக்கு. சுவாமி பிராகார மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி
நிஷ்டாதேவி உருவம் இருக்கிறது. இதனை, சனீஸ்வரர் என்று தவறாக எழுதி
இருந்தார்கள். நான்காவது மதில் (திருநீற்றுமதில்) மிகப்பெரியது. இது
பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்தலம் ஆகும். (அப்பு -தண்ணீர்) சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் இடத்தில் நீர் ஊறி வருவது இன்றும் காணத்தக்கது.
முற்பிறப்பில் 1சிலந்தியாயிருந்து சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தின்
பயனாய் அரசனாய்ப் பிறந்த கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற
கற்றளியை உடையது. வெளிப்புறத்து மதிலுக்குத் திருநீறு இட்டான் திருமதில்
என்று பெயர்.
இறைவர் சித்தராய்
எழுந்தருளித் திருநீ்ற்றைக் கூலியாகக்
கொடுத்து எடுப்பித்த காரணத்தால் அம்மதில் அப்பெயர் பெற்றது.
திருக்கயிலையிலிருந்து எழுந்தருளி இறைவி இங்குத் தவஞ்செய்து
ஞானோபதேசம் பெற்ற காரணத்தால் ஞானஸ்தலம் எனவும் இது
வழங்கப்படும்.
உறையூர்ச்சோழர்
மணியாரம் தரித்துக்கொண்டு காவிரியில்
நீராடினார். அது ஆற்றில் விழுந்துவிட்டது. உடனே அவர் சிவபெருமானே
கொண்டருளும் என வேண்டினார். அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில்
புக, அதனை இறைவருக்கு அபிடேகிக்கும் போது அவர் அதனை ஆரமாக
ஏற்றுக்கொண்டு சோழனுக்கு அருள் புரிந்ததும் இப்பதியேயாகும்.
இச்செய்தியை, சுந்தரமூர்த்தி நாயனார்
1குறிப்பு:
இச் செய்தியை அப்பர் பெருமானுடைய திருக்குறுக்கைப்
பதிகம், திருநேரிசை 4ஆவது பாடல் வலியுறுத்துகிறது.
|