|
இடப்பெற்றிருந்தது.
முதலாம் இராஜராஜ மன்னரது தேவியாராகிய பஞ்சவன்
மாதேவியார் இறைவனை வழிபட வந்தபொழுது இந்த நந்தவனத்திற்கு
எழுந்தருளிப் பார்வையிட்டதை ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.
மல்லிகைப் பூக்களைச் சாத்துவதற்காக மல்லிகை நந்தவனம் என்னும்
தோட்டமும் இருந்தது.
இக்கோயில்
திருமடைவிளாகத்தில் பெருந் திருவாட்டி என்னும்
பெயர் பூண்ட மடம் ஒன்று இருந்தது. இது இளங் காரிகுடையான்
சங்கரதேவன் சிவலோக நாயகனான கங்கை கொண்டசோழ அனந்த
பாலனால் செய்வித்ததாகும்.
இங்கா
நாட்டுப் பல்லவரையன் இத்திருக்கோயிலில் ஆடல்
விடங்கதேவரை எழுந்தருளுவித்திருந்தான். இத்திருக்கோயிலின் வாசல்
ஒன்றுக்கு ஏகநாயகன் திருவாசல் என்னும் பெயரை ஒரு கல்வெட்டு
குறிப்பிடுகின்றது. ஒரு பிள்ளையாருக்குப் புராண கணபதி என்னும் பெயர்
உண்மையை ஒரு கல்வெட்டு புலப்படுத்துகின்றது.
முதற் பராந்தகன்
காலத்துக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தென்கரை,
திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில் எனவும், முதற் குலோத்துங்கசோழன்
காலத்துக் கல்வெட்டுக்கள் உலகுய்யக் கொண்ட சோழவளநாட்டுத்
திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர் எனவும் குறிப்பிடுகின்றன.
முதற்
பராந்தகசோழன் காலத்தில் அளிக்கப்பட்டவை:-
திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு மார்கழித்
திருவாதிரை தோறும் நெய்யாடி அருளுதற்குத் தொண்டை நாட்டு,
செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு இடும்பேட்டைப் பண்டாரிகிழான்
கொட்டி என்பான் பதின்கழஞ்சு பொன் கொடுத்திருந்தான். மூலஸ்தானத்து
மகாதேவர்க்கு ஒரு நொந்தா விளக்கினுக்குப் புலியூர்க் கோட்டத்து
மயிலாப்பில் வியாபாரி விளத்தூர் கிழவன் அரையன் அரிவலன்
இருபத்தைந்து கழஞ்சு பொன்னை உதவியிருந்தான். இருமடிச் சோழப்
பல்லவரையர் திருவிடைமருதுடையார்க்குத் திருமெய்ப் பூச்சுச்
சந்தனத்திற்கும். சீதாரிக்கும், மாகேஸ்வரர்க்கும், பிராமணர்க்கும்.
திருநொந்தாவிளக்கு எட்டினுக்கும் ஆகப் பதினான்கு வேலி நிலத்தைத்
திருவிடைமருதில் நகரத்தாரிடையும், திரைமூர்ச்சபையாரிடையும் முதற்
பராந்தக சோழனது முப்பத்தைந்தாம் ஆண்டில் அதாவது கி.பி. 942இல்
விலைக்கு வாங்கி அளித்துள்ளான்.
|