|
இத்திருக்கோயிலில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்
ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகள் மூலஸ்தானத்து மகாதேவர்,
திருவிடைமருதுடையார், திருவிடைமருதில் ஆள்வார்,
திருவிடைமருதூருடைய தம்பிரானார் என்னும் திருப்பெயர்களாலும்,
நடராசப் பெருமான் மாணிக்கக்கூத்தர் என்னும் பெயராலும் வழங்கப்
பெற்றுள்ளனர்.
இத்திருக்கோயிலின்
முதல் பிராகாரத்து மேலைத் திருமாளிகையில்
மூப்பிமாரில் இராஜராஜேச்சரத்துப் பதியிலாரில் அரிய பிராட்டியார்,
பெருமாள் பெரியதேவர் திருபுவன வீரதேவரின் (மூன்றாங்குலோத்துங்க
சோழதேவரின்) முப்பத்தேழாம் ஆட்சி ஆண்டில் உடையார்
தைப்பூசமுடைய நாயனாரை எழுந்தருளுவித்துள்ளார். இத்திருக்கோயிலில்
தைப்பூசத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது. தைப்பூசத்
திருநாளில் தீர்த்தம் ஆடினபிற்றை நாள் தொடங்கி மூன்று நாளும்,
வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று நாளும், ஆக
ஏழு அங்கங்களுடன் கூடிய இவ் ஆரியக்கூத்து ஆடப் பெற்றுவந்தது.
இக்கோயிலில் நாடகசாலை ஒன்றும் இருந்தது. இச்செய்தியைத்
திரைமூர்நாடு உடையாரும், திருவிடைமருதில் நகரத்தாரும்,
தேவகன்மிகளும் நாடக சாலையிலே இருந்து என்னும் கல்வெட்டுப்
பகுதியால் அறியலாம். திருவிடைமருதுடையார் திருவோலக்கத்து
வீற்றிருக்குங்காலத்து அவருக்கு மூன்று சந்தியும் உடுக்கை
வாசிக்கப்பெற்றுவந்தது. பெருமான் எழுந்தருளுங்கால் தேவர் அடியார்
கவரி வீசிவந்தார்கள். அவர்கள் கவரிப்பிணாக்கள் என்னும் பெயரால்
அழைக்கப் பெற்றுள்ளனர்.
இக்கோயிலில்
தேவரடியாரைப் பாடச் செய்வதற்கும் ஏற்பாடு
செய்யப்பெற்றிருந்தது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும்
ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய நம்பி இவர்களுக்கு உய்யக்கொண்டார்
வளநாட்டு இருமாறன் பூண்டிப்பெருமாள் சதுர்வேதி மங்கலத்தில் திருபுவனச்
சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் 21 ஆம் ஆண்டில் நிலம்
விடப்பெற்றிருந்தது. ஒரு கல்வெட்டு நான்காம் பிராகாரத்தில்
எழுந்தருளியிருக்கும் பிடாரி போகிருந்த பரமேசுவரியைப் பற்றிக்
குறிப்பிடுகிறது.
இத்திருக்கோயிலுக்கு
உரியதாக திருக்கலசக்கோரோணியின்
தென்கரையில் ஒரு நந்தவனம் இருந்தது. அதற்குச் செம்பியன்
மாதேவியான பெருஞ்சண்பக நந்தவனம் என்னும் பெயர்
|