|
இவ்வூருக்கு நகரப்
பேருந்துகள் உள்ளன.
இறைவர்
திருப்பெயர் நெல்லிவனநாதர். இறைவி திருப்பெயர்
மங்களநாயகி.
தீர்த்தம்
பிரமதீர்த்தம், சூரியதீர்த்தம் என்பன.
தலமரம் நெல்லி.
ஞாயிறும்
பிரமனும் வழிபட்ட தலம். ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி
முதல் ஏழுநாளும், மாசிமாதம் 18உ ஏழுநாளும் அஸ்தமன சமயத்தில்
சூரியனுடைய கிரணங்கள் இறைவனது திருமேனியில் விழுகின்றன.
இத்தலத்திற்கு
ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
கல்வெட்டு:
கோயிலில்
எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன.
அவைகளுள் ஏழு இரண்டாம் இராஜராஜனுடையனவும் ஒன்று
வீரராஜேந்திரனுடையதும் ஆகும். கல்வெட்டுக்களில் ரொக்கம், நிலதானம்,
விளக்குக்காக நிலதானம் என்பவைகளே குறிக்கப் பெற்றுள்ளன.
கடவுள்
பெயர் திருநெல்லிக்காவுடையார். கூற்றம் - ஆர்வலக்கூற்றம்,
நாடு - இராஜேந்திர சோழ வளநாடு என்பதாம். வேறு செய்திகள்
தெரியவில்லை. பண்டைக் காலத்தில் இவ்விடம் நெல்லி மரக் காடாக
இருந்தது எனப் பெயரே விளக்குகின்றது.
59.
திருநெல்வாயில்
சுவாமியின்
பெயர் உச்சிநாதேசுவரர். தேவியின்பெயர் கனகாம்பிகை.
உச்சியார் என்பது தேவாரப் பெயர்.
இவ்வூர்
தென் ஆற்காடு மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரம்
தொடர்வண்டி நிலையத்திலிருந்து தென்கிழக்கே 13.5. கி. மீ. தூரத்தில்,
அண்ணாமலை நகருக்குத் தெற்கே 1.5 கி. மீ. தூரத்தில் உள்ளது. தற்பொழுது
சிவபுரி என்று வழங்கப்பெறுகிறது. புதுப்பிக்கப் பெற்ற தலமாகும். சிவபுரி
மான்மியம் என்ற தல வரலாறும் இதற்கு
|