|
திருநாவுக்கரசுநாயனார்
திருத்தாண்டகப் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி
நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைக்கொண்ட
பெருமையுடையது.
இத்தலத்திற்கு
ஸ்ரீ கமலை ஞானப்பிரகாச தேசிகர் அவர்களால்
இயற்றப்பட்ட தலபுராணம் ஒன்று இருக்கின்றது. அது இனிய எளிய தமிழ்
நூல். அச்சில் வெளிவந்துள்ளது.
நந்தியெம்பெருமானின்
திருமணத்திருவிழா ஒவ்வொரு ஆண்டிலும்
பங்குனி மாதத்தில் நடைபெறுகின்றது.
கல்வெட்டு:
இக்கோயிலில்
சோழர், பாண்டியர், ஹொய்சளர் ஆகியோரது 30
கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. ஹொய்சளர்கள் கண்ணனூரைத்
தலைநகரமாகக் கொண்டிருந்ததால் இந்த ஊரில் அவர்களின்
கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளில் சிங்கண தண்டநாயகன் முதலிய
படைத் தலைவர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு முன்
பாண்டியர்கள் வந்திருக்கின்றனர். ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் 19-7-1261,
29-10-1253, 19-4-1253 ஆகிய நாட்களில் கல்வெட்டு அமைத்துள்ளான்.
இங்கு இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், முதலாம்
குலோத்துங்கன் 2-ஆம் 3-ஆம் குலோத்துங்கன் ஆகியோரது
கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சோழர்களில் ஒரு அரசன் இருக்கும் போதே
மற்றவன் ஆளத்தொடங்கியதை அறிகிறோம். இராஜேந்திரன் காலத்திலேயே
இராஜாதிராஜன் பட்டம் எய்தினான் என ஒரு கல்வெட்டால் தெரிகிறது.
இராஜேந்திரன், இரண்டாம் கிருஷ்ணன் ஆகியோர் கோயிலுக்குப் பொன்,
வெள்ளிப் பாத்திரங்கள் அளித்துள்ளார்கள். இக் கோயிலுக்குப் பல
அரசிகளும் தானஞ்செய் திருக்கிறார்கள். ஹொய்சள அரசன் நரசிம்மன்
காலத்தில் ஒருவன் ஒரு கோயிலைக் கட்டிய செய்தி இங்குள்ள
கல்வெட்டால் அறிகிறோம்.
76.
திருமறைக்காடு
மறைகள் பூசித்த
காரணம் பற்றி இப்பெயர்பெற்றது. இச்செய்தி
சதுரம் மறைதான் துதி செய்து வணங்கு மதுரம் பொழில்சூழ்
மறைக்காட்டுறைமைந்தா என்னும் திருஞானசம்பந்தரது இத்தலத்தேவாரப்
பகுதியால் (பண் - இந்தளம். திருப்பாட்டு 1) விளங்கு
|