பக்கம் எண் :

243

மன்னர் காலத்தில் வினைதீர்த்த முதலியார் சபையில் அபிஷேகக்
கட்டளையும், அகோர சிவபண்டார சுவாமிக்கு இரண்டு வகையில் 400
பொன் வழங்கியதாகக் கண்டிருக்கிறது.

                     75. திருமழபாடி

     சேரர் கிளையினராகிய மழவர் பாடி செய்து கொண்டிருந்தமையால்
இப்பெயர் பெற்றது. பாடிதங்குமிடம். பாடி எனினும் பாசறை எனினும்
ஒக்கும். சிவபெருமான் மழுநிர்த்தஞ்செய்த தலமாதலால் மழுவாடி ஆயிற்று
என்பர்.

     இது திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 6 கி. மீ. தூரத்தில்
கொள்ளிடப்பேராற்றின் வடகரையில் இருக்கின்றது. அரியலூர், திருவையாறு,
திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. (காவிரி வடகரைத்
தலங்களுள் ஒன்று).

     இறைவரின் திருப்பெயர் வயிரத்தூண்நாதர். இத்திருப்பெயரை,
இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான். “மலையடுத்த மழபாடி
வயிரத்தூணே”, “மறைகலந்த மழபாடி வயிரத்தூணே” முதலான
தொடர்களில் எடுத்து ஆண்டுள்ளனர். இதை வடமொழியில்
வஜ்ரஸ்தம்பேசுவரர் என்று கூறுவர். பிரமனுலகத்திருந்த சிவலிங்கத்தைப்
புருஷா மிருகம் இங்குக் கொண்டுவந்து எழுந்தருளுவித்தது. அதை மீளவும்
கொண்டுபோதற்காகப். பிரமதேவர் அதைப் பெயர்த்து எடுக்க முயன்றார்.
அதை எடுக்க முடியாத பிரமன் ‘இது வயிரத் தூணோ’ என்று
வியந்தமையால் இப்பெயர் பெற்றது. இறைவியாரின் திருப்பெயர் அழகம்மை.

     தீர்த்தம் கொள்ளிடப்பேராறு.

     தலவிருட்சம் பனை.

     இந்திரன், திருமால் இவர்கள் வழிபட்டுப் பேறு எய்தினர்.
திருநந்திதேவர் திருவையாற்றிலிருந்து எழுந்தருளி - சுயசை அம்மையாரை
மணஞ்செய்து கொண்ட தலம். சுந்தரமூர்த்தி நாயனார், திருவாலம்பொழிலில்
எழுந்தருளியிருக்க, மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி,
‘மழபாடிக்கு வர மறந்தனையோ” என்று கூற, உடனே சுந்தரர் “பொன்னார்
மேனியனே” என்று தொடங்கும் பதிகம் பாடி வழிபட்ட பதி.
திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று,